ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

ராதாகிருஷ்ணன்

ஞானம் தரும் புதிய பார்வை

ஞானம் தரும் புதிய பார்வை
ADDED : அக் 30, 2009 03:29 PM

* தன்னைப் புரிந்து கொள்வதும் உணர்வதும் மிகப் பெரிய ஞானம் ஆகும். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் உட்பட பல பேரறிவாளர்களும் இதைக் கூறி இருக்கிறார்கள். புத்தரும் மகாவீரரும் இவ்வாறே முழு ஞானத்தைப் பெற்றவர்கள். அறியாமையைப் போக்கி அறிவும், அனுபவமும் சேர்ந்து கிடைப்பதே ஞானம் என்றும் சாத்திர நூல்கள் விளக்குகின்றன.
* அறிவு என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவது மட்டும் அல்ல. சொல்லிக் கொடுத்தோ, கேள்வி மூலமாகவோ, அறிவுக்கூர்மையினாலோ அடையக் கூடியதும் அல்ல என்று கடோபநிடதம் கூறுகிறது. அதுபோல மதம் என்பதும் சடங்குகளாலும், நம்பிக்கைகளாலும் உருவாவது அல்ல.
* முழுமையாக ஆன்மிக ஞானம் பெற்றுவிட்டபின், யாரும் பெருமைப்படக்கூடாது. ஞானம் என்பது படிப்படியாக அனுபவத்தால் உண்டாவதாகும். அனுபவத்தால் ஞானம் பெற்றவன் செய்யும் செயல்கள் யாவும் உயர்வடைகின்றன.
* ஒருவனை பெற்ற ஞானத்தால் உலகத்தையே புதிய நோக்கில் பார்க்கத் தூண்டும். அவனுள் புத்துணர்ச்சி பெருகும். அவன் புதுப்பிறவி எடுத்து புதிய மனிதனாக உலவுவான். ஞானக்கண் மனிதனை உள்முகமாகப் பார்க்கத் தூண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்